சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் பிடித்த காய்கறியாக உருளைக்கிழங்கு உள்ளது. பெரும்பாலும் உருளைக்கிழங்கை பிடிக்காதவர்கள் யாருமே இல்லை. வாரத்தில் இரண்டு முறையாவது உருளைக்கிழங்கை நம் உணவில் சேர்த்துக்கொள்ளுவோம். காய்கறிகளை நாம் உணவில் சேர்க்கும்போது, பெரும்பாலான காய்கறிகளின் தோலை தேவையில்லை என்று நாம் நீக்கி விடுகிறோம் அல்லது தூக்கி எறிகிறோம். அந்தவகையில், உருளைக்கிழங்கின் தோலையும் நாம் நீக்கி விட்டுத்தான் சமைக்கிறோம். இது மிகவும் தவறான விஷயம். காய்கறியில் எப்படி ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளதோ, அதேபோல அதன் தோலிலும் பல சத்துக்கள் உள்ளன.
உருளைக்கிழங்கு தோல் பல நோய்களை எதிர்த்துப் போராடும் திறன்களைக் கொண்டுள்ளன, மேலும் அவை காய்கறியை விட மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இனி, உருளைக்கிழங்கு தோலை குப்பைத் தொட்டியில் போடுவதற்கு முன்னர், சில விஷயங்களை இக்கட்டுரையை படித்து தெரிந்துகொள்ளுங்கள்.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது
உருளைக்கிழங்கு தோலில் வைட்டமின் சி நிறைந்துள்ளது மற்றும் சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்ற முகவராகவும் இது செயல்படுகின்றன. உருளைக்கிழங்கு தோல்களில் கால்சியம் மற்றும் பி-காம்ப்ளக்ஸ் வைட
புற்றுநோய் வராமல் பாதுகாக்கிறது
உருளைக்கிழங்கு தோல்களில் பைட்டோ கெமிக்கல்கள் நிறைந்துள்ளன. அவை சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றிகளாக செயல்படுகின்றன. மேலும், அவற்றில் குளோரோஜெனிக் அமிலமும் உள்ளது. இது புற்றுநோய் வராமல் உங்களைப் பாதுகாக்கிறது.
இரத்தக் கொழுப்பைக் குறைக்கிறது
நார்ச்சத்து மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள், பாலிஃபீனால்கள் மற்றும் கிளைகோல்கலாய்டுகள் ஆகியவை இரத்தத்தில் உள்ள கொழுப்பைக் கட்டுக்குள் வைத்திருக்கின்றன. ஆதலால், உருளைக்கிழங்கு தோலை உங்கள் உணவில் தவிர்க்காமல் சேர்க்கும்போது, உங்கள் இரத்த அழுத்த அளவு குறையும்.
இதயத்தைப் பாதுகாக்கிறது
உருளைக்கிழங்கு தோலில் பொட்டாசியம் நிறைந்துள்ளது. இது மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கிறது. மேலும், உங்கள் இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது.
கரும்புள்ளிகளை ஒளிரச் செய்கிறது
சருமத்தில் உருளைக்கிழங்கு தோலைப் பயன்படுத்துவது ஆரோக்கியமானதாகக் கருதப்படுகிறது. ஏனெனில் அவை பாக்டீரியா எதிர்ப்பு, பீனாலிக் மற்றும் ஆக்ஸிஜனேற்ற கலவைகள் கொண்டவை. அவை லேசான ப்ளீச்சிங் செயல்பாட்டைச் செய்கின்றன. மேலும் கரும்புள்ளிகளை ஒளிரச் செய்கின்றன. இதனால், உங்கள் சருமம் பளபளப்பாக ஒளிர உதவுகிறது.
எலும்புகளுக்கு நல்லது
உருளைக்கிழங்கு தோலில் இரும்பு, பொட்டாசியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், கால்சியம், தாமிரம் மற்றும் துத்தநாகம் உள்ளன. மேலும் இவை அனைத்தும் சேர்ந்து எலும்பின் அடர்த்தியை பராமரிக்கவும், பெண்களின் ஆஸ்டியோபோரோசிஸ் அபாயத்தைக் குறைக்கவும் உதவுகின்றன.
முடி பராமரிப்புக்கு நல்லது
நிபுணர்களின் கூற்றுப்படி, உருளைக்கிழங்கு தோலை சாறு கொண்டு உச்சந்தலையில் மசாஜ் செய்வது முடிக்கு பளபளப்பை சேர்க்கிறது மற்றும் அவை வேகமாக வளர உதவுகிறது. இனிமேல், உங்கள் முடி பராமரிப்பில் உருளைக்கிழங்கு தோலையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.
Read more about: health wellness heart cancer bones cholesterol immunity skin hair care potato peel இதயம் புற்றுநோய் எலும்புகள் கொழுப்பு நோய் எதிர்ப்பு சக்தி தோல் முடி பராமரிப்பு உருளைக்கிழங்கு தோல்
Reasons You Should Never Throw Away Potato Peels in tamil
Here we are talking about the Reasons You Should Never Throw Away Potato Peels in tamil.
- Sri Lanka: Chinese Roulette in Paradise Isle
- Paul Kimmage: Low lie the fields of Athenry
- Longing for Land
கேன்சர் & இதயம் முதல் எலும்பு ஆரோக்கியம் வரை உருளைக்கிழங்கு தோல் செய்யும் அதிசயங்கள் என்ன தெரியுமா? have 88 words, post on tamil.boldsky.com at September 26, 2022. This is cached page on Health Breaking News. If you want remove this page, please contact us.