உலகில் சர்க்கரை நோயைப் போன்றே இரத்த அழுத்த பிரச்சனையால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இரத்த அழுத்தத்தில் இரண்டு வகைகள் உள்ளன. அவை உயர் இரத்த அழுத்தம், குறைந்த இரத்த அழுத்தம். இவற்றில் உயர் இரத்த அழுத்தம் என்பது தமனி சுவர்களுக்கு எதிராக இரத்தத்தின் அழுத்தம் அதிகமாக இருக்கும் நிலையாகும். பொதுவாக 140/90-க்கு மேல் இருந்தால், அது உயர் இரத்த அழுத்தம் என வரையறுக்கப்படுகிறது. அதுவும் அழுத்தமானது 180/120 ஆக இருந்தால் அது கடுமையானதாக கருதப்படுகிறது.
உயர் இரத்த அழுத்த பிரச்சனைக்கு குறிப்பிட்ட அறிகுறிகள் எதுவும் இல்லை. மேலும் உயர் இரத்த அழுத்த பிரச்சனைக்கு சிகிச்சை அளிக்காமல் இருந்தால், அது இதய நோய் மற்றும் பக்கவாதம் போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். எனவே உயர் இரத்த அழுத்த பிரச்சனையைக் கண்டறிய குறிப்பிட்ட வயதிற்கு மேல் இரத்த அழுத்தத்தை தவறாமல் சோதித்துப் பார்க்க வேண்டும். உயர் இரத்த அழுத்த பிரச்சனையை ஆரோக்கியமான டயட், தினசரி உடற்பயிற்சி மற்றும் மருந்துகளை தவறாமல் எடுத்து வருவதன் மூலம் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளலாம்.
உணவில் முழு கவனம் செலுத்தவும்
இரத்த அழுத்த நோயாளிகள், தங்கள் உணவில் முழு கவனத்தை செலுத்த வேண்டும். நாம் என்ன சாப்பிடுகிறோ./p>
சர்க்கரை
சர்க்கரை என்ன தான் சுவையூட்டியாக இருந்தாலும், இது ஆரோக்கியமற்ற உணவுப் பொருள். சர்க்கரையால் தயாரிக்கப்பட்ட உணவுப் பொருட்கள் உண்பது இரத்த சர்க்கரை அளவை அதிகரிப்பதோடு மட்டுமின்றி, இரத்த அழுத்தத்தையும் அதிகரிக்கும். சர்க்கரையானது உடல் எடையை அதிகரிப்பதோடு, பிற நோய்களின் அபாயத்தையும் அதிகரிக்கிறது. ஆகவே உயர் இரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்கள், சர்க்கரை அல்லது சர்க்கரை நிறைந்த உணவுகளை குறைவான அளவில் உட்கொள்ளுங்கள்.
உப்பு
உணவின் சுவையைக் கூட்ட சேர்க்கும் உப்பு உயர் இரத்த அழுத்தம் மற்றும் இதய நோய்களுக்கு ஒரு முக்கிய காரணியாகும். எனவே தான் இரத்த அழுத்தம் உள்ளவர்களை உணவில் குறைவான அளவு உப்பை சேர்க்க மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். அதுமட்டுமின்றி உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் அதிகளவு உப்பை எடுக்கும் போது, அது உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தலாம்.
பிட்சா
இன்று பெரும்பாலானோரின் விருப்பமான உணவாக பிட்சா உள்ளது. உண்மையில் பிட்சாவில் சர்க்கரை, நிறைவுற்ற கொழுப்பு மற்றும் உப்பு அதிகளவில் உள்ளது. ஆகவே ஏற்கனவே பிபி பிரச்சனை உள்ளவர்கள் பிட்சாவை சாப்பிடும் போது, அது இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும்.
இறைச்சிகள்
பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளில் உப்பு அதிகம் இருக்கும். எனவே இந்த மாதிரியான இறைச்சிகளை சாப்பிட்டால், அது இரத்த அழுத்தத்தை சட்டென்று அதிகரிக்கும். ஆகவே உங்களுக்கு உயர் இரத்த அழுத்தம் இருந்தால், இந்த இறைச்சிகளில் இருந்து முற்றிலும் விலகி இருங்கள்.
ஊறுகாய்
இந்தியர்களின் உணவுகளில் ஊறுகாய் ஒரு முக்கியமான சைடு டிஷ்ஷாகும். சொல்லப்போனால் பல இந்தியர்களுக்கு ஊறுகாய் இல்லாமல//p>
ஆல்கஹால்
இன்று ஆல்கஹால் குடிப்பது ஒரு ஃபேஷனாகிவிட்டது. அதிகப்படியான ஆல்கஹால் உட்கொள்வது இரத்த அழுத்தத்தை வேகமாக அதிகரிக்கும். எனவே உங்களுக்கு ஏற்கனவே பிபி பிரச்சனை இருந்தால், ஆல்கஹாலை அருந்தாதீர்கள். இல்லாவிட்டால், பெரிய பிரச்சனையை சந்திக்க வேண்டியிருக்கும்.
Read more about: blood pressure foods health tips wellness health இரத்த அழுத்தம் உணவுகள் ஆரோக்கிய குறிப்புகள் ஆரோக்கியம் உடல் நலம்
What High Blood Pressure Patients Should Not Eat In Tamil
Patients with high blood pressure should not eat these things, Read on to know more..
- Bihar govt order to ensure ration to AES-hit families
- Gear Test: AE Light XENIDE AE X15
- Canon EOS 70D review
- What Parents Should Know About Infections and Mental Health
உயர் இரத்த அழுத்தம் இருந்தா இந்த உணவுகளை சாப்பிடாதீங்க.. இல்லன்னா உயிருக்கே ஆபத்தாயிடும்... have 99 words, post on tamil.boldsky.com at June 23, 2022. This is cached page on Health Breaking News. If you want remove this page, please contact us.