இன்று இரவு உங்கள் வீட்டில் உள்ளோருக்கு ஏதேனும் வித்தியாசமான மற்றும் ஸ்பெஷலான ரெசிபியை செய்து கொடுத்த அசத்த நினைக்கிறீர்களா? அப்படியானால் ஹைதராபாத் ஸ்பெஷல் முட்டை மலாய் குருமா செய்யுங்கள். இந்த குருமா சப்பாத்தி, நாண், புவால், இடியாப்பம், அப்பம் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். குறிப்பாக இந்த ரெசிபி செய்வதற்கு சுலபமாகவும், அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையிலும் இருக்கும்.
உங்களுக்கு ஹைதராபாத் ஸ்பெஷல் முட்டை மலாய் குருமா எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஹைதராபாத் ஸ்பெஷல் முட்டை மலாய் குருமா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* முட்டை – 6 (வேக வைத்தது)
* எண்ணெய் – 3-4 டேபிள் ஸ்பூன்
* சீரகம் – 1/4 டீஸ்பூன்
* பச்சை மிளகாய் – 5-6
* வெங்காயம் – 2 (நறுக்கியது)
* கொத்தமல்லி – 1/4 கப்
* புதினா – 1/4 கப்
* இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டேபிள் ஸ்பூன்
* தயிர் – 2 டேபிள் ஸ்பூன்
* மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
* மல்லித் தூள் – 1 டீஸ்பூன்
* சீரகப் பொடி – 1/4 டீஸ்பூன்
* முந்திரி – 6-8 (வெதுவெதுப்பான நீரில் 15 நிமிடம் ஊற வைத்து பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ளவும்)
* பால்/சுடுநீர் – 1/2 – 3/4 கப்
* கரம் மசாலா பவுடர் – 1/4 டீஸ்பூன்
* மிளகுத் தூள் – 1/4 டீஸ்பூன்
* உப்பு – சுவைக்கேற்ப
* ஹெவி க்ரீம் – 2 டேபிள் ஸ்பூன்
* கொத்தமல்லி – சிறிது (நறுக்கியது)
* வெண்ணெய் – 1 டீஸ்பூன்
செய்முறை:
* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 3-4 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகத்தை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* அதற்குள் மிக்சர் ஜாரில் பச்சை மிளகாய், வெங்காயம், கொத்தமல்லி, புதினா ஆகியவற்றை சேர்த்து அரைத்து, உடனே வாணலியில் சேர்த்து கிளறி விட வேண்டும்.
* பின் அதில் சிறிது உப்பு சேர்த்து மூடி வைத்து 7-10 நிமிடம் குறைவான தீயில் எண்ணெய் சற்று பிரியும் வரை வேக வைக்க வேண்டும்.
* பின்பு இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து சில நிமிடங்கள் கிளறி, தயிரை ஊற்றி குறைவான தீயில் மீண்டும் கொதிக்க வைக்க வேண்டும்.
* பிறகு மஞ்சள் தூள், மல்லித் தூள், சீரகப் பொடி, கரம் மசாலா ஆகியவற்றை சேர்த்து, பச்சை வாசனை போக வதக்கி விடவேண்டும்.
* பின் அதில் முந்திரி பேஸ்ட் சேர்த்து 2 நிமிடம் வேக வைத்து, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, பால்/நீரை ஊற்றி கிளறி, 1-2 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
* அதன் பின் கரம் மசாலா பவுடர், மிளகுத் தூள், ஒரு சிட்டிகை சர்க்கரை சேர்த்து கிளறி, வேண்டுமானால் சிறிது உப்பு சேர்த்து கிளறி விடவும்.
* பின்னர் வேக வைத்த முட்டைகளை சேர்த்து மெதுவாக கிளறி, 1-2 நிமிடம் மூடி வைத்து வேக வைத்து, இறுதியில் ஹெவி க்ரீம், நறுக்கிய கொத்தமல்லி மற்றும் வெண்ணெய் சேர்த்து ஒருமுறை கிளறி இறக்கினால், ஹைதராபாத் முட்டை மலாய் குருமா தயார்.
Image Courtesy: yummyoyummy
[ of 5 – Users]
Hyderabadi Egg Malai Korma Recipe In Tamil
Want to know how to make a hyderabadi egg malai korma recipe at home? Take a look and give it a try…
- Hands on: Sony Alpha A6400 review
- Best F-mount lenses for Nikon Z
- Best Canon camera 2019: 10 quality options from Canon's camera stable
- Canon EOS RP: second EOS R-series model confirmed
- The most secure VPN of 2018: top picks for the best encryption
ஹைதராபாத் ஸ்பெஷல் முட்டை மலாய் குருமா have 109 words, post on tamil.boldsky.com at June 29, 2022. This is cached page on Health Breaking News. If you want remove this page, please contact us.