பாக்டீரியா, வைரஸ்கள் மற்றும் நச்சுகள் ஆகியவற்றால் ஏற்படும் நோய்களிலிருந்து நம்மைப் பாதுகாப்பதற்கு நமது உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பு மிகவும் முக்கியம். நன்கு செயல்படும் நோயெதிர்ப்பு அமைப்பு நோய் தொற்றுக்களை உங்கள் உடலுக்குள் செல்ல அனுமதிக்காது. சளி முதல் காய்ச்சல் வரை கோவிட்-19 வரை, உங்கள் உடலை பாதுகாக்க நோயெதிர்ப்பு சக்தி அவசியம். ஆரோக்கியமான வாழ்க்கை முறையைத் தேர்ந்தெடுப்பதே உங்கள் முதல் பாதுகாப்பு. பொதுவான நல்ல ஆரோக்கிய வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவது உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை இயற்கையாகவே சரியாகச் செயல்பட வைப்பதற்கு நீங்கள் எடுக்கக்கூடிய சிறந்த படியாகும். உங்கள் நோயெதிர்ப்பு அமைப்பு உட்பட, உங்கள் உடலின் ஒவ்வொரு பகுதியும் சுற்றுச்சூழல் தாக்குதல்களிலிருந்து பாதுகாக்கப்படும்போது சிறப்பாகச் செயல்படும்.
உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்த உதவும் சில விஷயங்களை நீங்கள் செய்யலாம். எனவே, உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை எவ்வாறு மேம்படுத்துவது? உங்கள் தினசரி பழக்கங்களை மேம்படுத்துவதன் மூலம் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை எவ்வாறு மேம்படுத்தலாம் என்பதைப் பற்றி இங்கே காணலாம்.
ஏழு மணி நேரத்திற்கும் மேலாக தூங்குங்கள்
தூக்கமின்மை நோயெதிர்ப்பு செயல்பாட்டை கணிசமாகக் குறைக்கிறது. தூங்குவது ஒரு சுறுசுறுப்பான செயலாகத் தெரியவில்லை என்றாலும், நீங்கள் தூங்கும்போது உங்கள் உடலில் பல முக்கியமான விஷயங்கள் நடக்கும். உதாரணமாக, நீங்கள் தூங்கும் போது, முக்கியமான தொற்றுநோயை எதிர்த்துப் போராடும் மூலக்கூறுகள் உருவாகின்றன. போதுமான தூக்கம் இல்லாதவர்கள், ஜலதோஷம் போன்ற வைரஸ்களுக்கு ஆளான பிறகு நோய்வாய்ப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று ஆராய்ச்சி கூறுகிறது.
நாள் முழுவதும் தண்ணீர் குடிக்கவும்
நோயெதிர்ப்பு செயல்பாட்டிற்கு நீரேற்றம் அவசியம். ஏனெனில் இது நச்சுகளை வெளியேற்ற உதவுகிறது. நாள் முழுவதும் குறைந்த திரவத்தை உட்கொள்ளும் வயதான மக்களுக்கு இது மிகவும் முக்கியமானது. அதிகளவு தண்ணீர் குடிப்பது பல உடல்நல பிரச்சனைகளிலிருந்து உங்களை பாதுகாக்க உதவுகிறது.
வண்ணமயமான காய்கறிகள் மற்றும் பழங்களை சாப்பிடுங்கள்
ஒரு சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பழக்கம் ஆரோக்கியமான தாவர அடிப்படையிலான உணவை சாப்பிடுவதாகும். உங்கள் உணவை மாற்றுவதன் மூலம், நீங்கள் A, B6, C மற்றும் E போன்ற ஆக்ஸிஜனேற்ற வைட்டமின்கள் மற்றும் செலினியம், இரும்பு, ஃபோலிக் அமிலம் மற்றும் துத்தநாகம் ஆகியவற்றை உட்கொள்வதை உறுதிசெய்கிறீர்கள். நீங்கள் பல்வேறு பழங்கள் மற்றும் காய்கறிகளை உட்கொள்வதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். அதில், ஊதா முட்டைக்கோஸ் சிறந்த ஒன்றாகும். இது அதிக அளவு ஆக்ஸிஜனேற்றங்களைக் கொண்டுள்ளது மற்றும் ஒப்பீட்டளவில் மலிவானது. கூடுதலாக, உங்கள் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த அதிக பருப்பு வகைகளை உட்கொள்வதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
புரோபயாடிக் உணவுகளை உண்ணுங்கள்
கேஃபிர் மற்றும் தயிர் இரண்டிலும் புரோபயாடிக்குகள் உள்ளன, அவை உடலில் வீக்கத்தைக் குறைக்கின்றன. மேலும், புரோபயாடிக் உணவுகள் செரிமான அமைப்பில் நல்ல பாக்டீரியாக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதன் மூலம் ஜலதோஷத்தின் காலத்தை இரண்டு நாட்கள் குறைத்து அவற்றின் தீவிரத்தை 34 சதவீதம் குறைக்கும் என்று ஒரு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. பால் பொருட்களை விரும்பாதவர்கள், கொம்புச்சா, சார்க்ராட், ஊறுகாய், மிசோ, டெம்பே, கிம்ச்சி, புளிப்பு ரொட்டி மற்றும் சில சீஸ்கள் போன்ற பிற புரோபயாடிக் உணவுகளை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
கைகளை நன்றாக கழுவுங்கள்
கோவிட்-19க்கு எதிரான நமது போராட்டத்தின் ஒரு பகுதியாக, கைகளை நன்றாக கழுவும் பழக்கத்தை பெரும்பாலான மக்கள் வளர்த்துக் கொண்டுள்ளனர். இருப்பினும், கிருமிகளை அகற்றுவதற்கான சிறந்த வழி உங்கள் கைகளை சோப்பு மற்றும் தண்ணீரில் குறைந்தது 20 விநாடிகள் கழுவுவதாகும். கை சுத்திகரிப்பாளரைப் பயன்படுத்தவும் பரிந்துரைக்கப்படுகிறது.
மன அழுத்தத்தை நிர்வகிக்கவும்
நாள்பட்ட மன அழுத்தம் உங்களுக்கு பல்வேறு உடல்நல பிரச்சனைகளை ஏற்படுத்தும். இது உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தையும் பாதிக்கிறது. இதனால், உங்களுக்கு நோய்தொற்று ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது. ஆதலால், உங்கள் மன அழுத்தத்தை நிர்வகிப்பது மிக முக்கியம். மன அழுத்தம் என்பது ஒவ்வொருவருக்கும் வித்தியாசமானது, அதை நாம் எப்படிச் சமாளிப்பது என்பதும் சமமாக வேறுபட்டது. ஆழ்ந்த சுவாசம், தியானம், பிரார்த்தனை அல்லது உடற்பயிற்சி போன்ற மன அழுத்தத்தைக் குறைக்க உதவும் செயல்பாடுகளை நீங்கள் மேற்கொள்ள வேண்டும்.
தவறாமல் உடற்பயிற்சி செய்யுங்கள்
உடல் செயல்பாடுகளைப் பயிற்சி செய்வது தசைகளை உருவாக்குவதற்கும் மன அழுத்தத்தைப் போக்குவதற்கும் நன்மை பயக்கும். ஆரோக்கியமாக இருப்பதற்கும் வலுவான நோயெதிர்ப்பு மண்டலத்தை பராமரிப்பதற்கும் இது முக்கியம். உடற்பயிற்சி உங்கள் ஒட்டுமொத்த சுழற்சியை அதிகரிப்பதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தலாம். இது உங்கள் நோயெதிர்ப்பு செல்கள் மற்றும் பிற தொற்று-எதிர்ப்பு மூலக்கூறுகள் உங்கள் உடல் முழுவதும் எளிதாக பயணிக்க உதவுகிறது. ஒரு நாளைக்கு 30 நிமிடங்களுக்கு மிதமான மற்றும் தீவிரமான உடற்பயிற்சி உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும்.
Read more about: health wellness food immunity sleep water fruits habits exercise stress உடல்நலம் ஆரோக்கியம் உணவு நோய் எதிர்ப்பு சக்தி தூக்கம் தண்ணீர் பழங்கள் பழக்கவழக்கங்கள் உடற்பயிற்சி மன அழுத்தம்
Daily Habits To Improve Immunity in tamil
Here we are talking about the Daily Habits To Improve Immunity in tamil.
- The 10 best full-frame DSLRs in 2017
- The 10 best full-frame DSLRs in 2018
- Panasonic announces G2 and G10 Micro Four Thirds interchangeable lens compact cameras
- Lose the wires, keep the security: 6 wireless access points tested
- The best firewall is ....
- Wi-Fi security standard to require new hardware
- New generation of hacking tools puts many more Wireless LANs at risk
உங்க நோயெதிர்ப்பு சக்திய பலமடங்கு அதிகரிக்க...தினசரி நீங்க இத பண்ணா போதுமாம்...! have 125 words, post on tamil.boldsky.com at May 25, 2022. This is cached page on Health Breaking News. If you want remove this page, please contact us.