கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸுடன் போராடி வருகிறோம். இன்னும் அது முடிவுக்கு வருவதாக தெரியவில்லை. சீரான இடைவெளியில் உருமாற்றமடைந்த பரவிக் கொண்டு தான் இருக்கின்றன. இதில் கொரோனாவின் டெல்டா மாறுபாடு இரண்டாம் அலையை ஏற்படுத்தி பல உயிர்களைப் பறித்த நிலையில், தற்போது கொரோனாவின் உருமாற்றமடைந்த ஓமிக்ரான் மாறுபாடு பரவி பல நாடுகளில் மூன்றாம் அலையை ஏற்படுத்தி வருகிறது.
ஆனால் ஓர் நற்செய்தி ஓமிக்ரான் வேகமாக பரவுமே தவிர, உயிரைப் பறிக்கும் அளவில் கொடியது அல்ல. ஆனால் சீனாவைச் சேர்ந்த வுஹான் விஞ்ஞானிகள் தற்போது கவலையளிக்கும் ஓர் செய்தியை வெளியிட்டு எச்சரிக்கின்றனர்.
நியோகோவ்
2019 ஆம் ஆண்டில் கோவிட்-19 வைரஸ் முதன்முதலாக பரவிய சீனாவில் உள்ள வுஹானைச் சேர்ந்த விஞ்ஞானிகள், தென்னாப்பிரிக்காவில் பரவும் ஒரு புதிய வகை சார்ஸ் கொரோனா வைரஸ் குறித்து எச்சரித்துள்ளனர். இந்த வைரஸின் பெயர் தான் ‘நியோகோவ்’. இந்த வைரஸ் அதிக இறப்பை ஏற்படுத்துவதோடு, வேகமாக பரவக்கூடியது என்று ரஷ்ய செய்தி நிறுவனமான ஸ்புட்னிக் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
ரஷ்ய செய்தி நிறுவனமான ஸ்புட்னிக் அறிக்கையின் படி, நியோகோவ் என்னும் வைரஸ் புதியது அல்ல. இது MERS-CoV வைரஸுடன் தொடர்புடையது. முக்கிய
விலங்குகளிடையே மட்டும் பரவும் நியோகோவ்
நியோகோவ் தென்னாப்பிரிக்காவில் உள்ள வௌவால்களிடையே கண்டறியப்பட்டது மற்றும் தற்போது இது விலங்குகளிடையே மட்டுமே பரவுகிறது. ஆனால் இந்த நியோகோவ் PDF-2180-CoV ஆக உருமாற்றமடைந்தால், மனிதர்களை நிச்சயம் பாதிக்கக்கூடும் என்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
ஒரு வைரஸ் பிறழ்வு
வுஹான் பல்கலைகழகம் மற்றும் சைனீஸ் அகாடமி ஆஃப் சயின்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் பயோபிசிக்ஸ் ஆகியவற்றின் ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, இந்த நியோகோவ் வைரஸ் மனிதர்களிடம் ஊடுருவுவதற்கு ஒரே ஒரு பிறழ்வு மட்டுமே தேவைப்படுகிறது. மேலும் இந்த ஆராய்ச்சியின் முடிவுகளானது நாவல் கொரோனா வைரஸை விட வித்தியாசமாக ACE2 ஏற்பியுடன் பிணைப்பதால் இது கொரோனாவைப் போன்று ஆபத்தை ஏற்படுத்தும் என தெரிவிக்கின்றன. இதன் விளைவாக மூச்சுக்குழாய் நோய் உள்ளவர்களால் அல்லது நோய்த் தடுப்பூசி போட்டவர்களால் உற்பத்தி செய்யப்படும் ஆன்டிபாடிகள் அல்லது புரத மூலக்கூறுகளால் நியோகோவ்-ஐ குணப்படுத்த முடியாது.
சீன ஆராய்ச்சியாளர்களின் கூற்று..
சீன ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, நியோகோவ்வானது அதிக இறப்பு விகிதம் மற்றும் தற்போதைய SARS-CoV-2 கொரோனா வைரஸை விட வேகமாக பரவக்கூடியது. இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட மூவரில் ஒருவர் இறந்துவிடுவர் என்று எச்சரித்துள்ளனர்.
எனவே இன்னும் மனிதர்களிடம் இது பரவ ஆரம்பிக்கவில்லை என்று கவனக்குறைவாக இருப்பதைத் தவிர்த்து, முடிந்தவரை பாதுகாப்புடன் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும். மருத்துவ கட்டமைப்புகளை அரசுகள் முறையாக உருவாக்க வேண்டும் என கடந்த ஆண்டே உலக சுகாதார அமைப்பு எச்சரித்தது. இந்த நியோகோவ்வை நி./p>
Read more about: coronavirus virus wellness health tips health கொரோனா வைரஸ் கோவிட் வைரஸ் உடல் நலம் ஆரோக்கிய குறிப்புகள் ஆரோக்கியம்
NeoCov: Wuhan Scientists Warn of New Coronavirus Strain With High Death, Infection Rate
NeoCov Coronavirus Variant: Scientists in Wuhan have warned of a new variant of coronavirus—NeoCov, currently circulating in South Africa. It has High Death and Infection Rate says Report.
- Sri Lanka: Chinese Roulette in Paradise Isle
- Paul Kimmage: Low lie the fields of Athenry
- Longing for Land
கொரோனாவை விட அதிக மரணத்தை உண்டாக்கும் திறன் கொண்ட புதிய வைரஸ் - எச்சரிக்கும் சீன விஞ்ஞானிகள் have 107 words, post on tamil.boldsky.com at January 28, 2022. This is cached page on Health Breaking News. If you want remove this page, please contact us.