நவகிரகங்களில் ரிஷபம் மற்றும் துலாம் ராசியின் அதிபதி தான் சுக்கிரன். இந்த சுக்கிரன் ஏற்கனவே தனுசு ராசியில் வக்ர நிலையில் பயணித்து வருகிறார். இந்நிலையில் சுக்கிரன் 2022 ஜனவரி 29 ஆம் தேதி சனிக்கிழமை மதியம் 14.55 மணிக்கு வக்ர நிலை முடிவுக்கு வந்து, நேர்கதியில் பயணிக்கவுள்ளார்.
பொதுவாக கிரகங்களின் இட மாற்றம் ஒவ்வொரு ராசியிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். அதுவும் வக்ர நிலையில் இருந்து நேர்கதியில் கிரகங்கள் பயணிக்கும் போது அது சற்று தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் சுக்கிரன் தனுசு ராசியில் நேர்கதியில் பயணிக்க ஆரம்பிக்கும் போது 12 ராசிக்காரர்களும் எந்த மாதிரியான பலன்களைப் பெறப் போகிறார்கள் என்பதை இப்போது காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் 9 ஆவது வீட்டில் இருக்கும் சுக்கிரனால், பணப்பிரச்சனைகள் நீங்கி, நிதி நிலைமை வலுவாக இருக்கும். நீண்ட நாட்களுக்கு முன் கடனாக கொடுத்த பணம் திரும்ப கிடைக்கும் வாய்ப்புள்ளது. ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகமாக இருக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். வெளிநாடு செல்ல எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். இக்காலத்தில் உங்கள் கோபத்தைக் கட்டுக்குள் வைத்துக் கொண்டால், முன்னேற்றம் நிச்சயம் கிடைக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 8 ஆவது வீட்டில் இருக்கும் சுக்கிரனால் எதிர்பாராத பலன்கள் கிடைக்கும். மரியாதை அதிகரிக்கும். சமூகத்தில் அந்தஸ்து அதிகரிக்கும். ஆனால் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டியிருக்கும். பணியிடத்தில் சதியால் பலியாவதைத் தவிர்த்திடுங்கள். திருமண வாழ்வில் மனக்கசப்பு ஏற்படவிடாதீர்கள். இக்காலத்தில் உங்களின் உத்திகள் மற்றும் திட்டங்களை ரகசியமாக வைத்து செயல்படுத்துங்கள்.
மிதுனம்
மிதுன ராசியின் 7 ஆவது வீட்டில் இருக்கும் சுக்கிரனால் உங்களுக்கு நல்ல வெற்றி கிடைக்கும். அரசின் முழு ஒத்துழைப்பும் கிடைக்கும். திருமணப் பேச்சு வார்த்தை வெற்றியடையும். இக்காலம் மாணவர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். முயற்சி செய்தால், வெற்றிக்கான வாய்ப்புகள் அதிகபட்சமாக இருக்கும். அரசுத் துறைகளில் எதிர்பார்த்த பணிகள் கிடைக்கும்.
கடகம்
கடக ராசியின் 6 ஆவது வீட்டில் இருக்கும் சுக்கிரனால், இந்த ராசிக்காரர்களுக்கு மிகவும் ஏற்ற இறக்கமாக இருக்கும். எதிரிகள் மிகுதியாக இருப்பார்கள். நீதிமன்ற வழக்குகளில் மிகவும் கவனமாக முடிவுகளை எடுங்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்கள் உங்களை அவமானப்படுத்த முயற்சிக்கலாம். எனவே கவனமாக இருங்கள். யாருக்கும் பணத்தைக் கடனாகக் கொடுக்காதீர்கள், இல்லையெனில் நீங்கள் நிதி இழப்பை சந்திக்க நேரிடும்.
சிம்மம்
சிம்ம ராசியின் 5 ஆவது வீட்டில் சுக்கிரன் இருப்பதால், இந்த ராசிக்காரர்களுக்கு இக்காலம் மிகுந்த வெற்றியைத் தரும். குறிப்பாக மாணவர்களுக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். புதிதாக திருமணமானவர்களுக்கு குழந்தை உண்டாக வாய்ப்புள்ளது. காதல் திருமணம் செய்ய நினைத்தால், அதற்கு சந்தர் /p>
கன்னி
கன்னி ராசியின் 4 ஆவது வீட்டில் சுக்கிரன் இருப்பதால், இனிமையான பலன்கள் கிடைக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. வீடு, வாகனம் வாங்கும் முயற்சியில் இருந்தால் அதற்கான வாய்ப்பு சாதகமாக அமையும். வெளிநாடு செல்ல மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றி பெறும்.
துலாம்
துலாம் ராசியின் 3 ஆவது வீட்டில் சுக்கிரன் இருப்பதால், நீங்கள் நன்கு யோசித்து வைத்துள்ள உத்திகள் அனைத்தும் பலனளிக்கும். இக்காலத்தில் அதிக தொண்டு செய்வீர்கள். உங்களின் முடிவும், பணியும் பாராட்டப்படும். மதம் மற்றும் ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். உங்கள் குழந்தை தொடர்பான கவலைகள் நீங்கும். புது தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் வாய்ப்பும் உள்ளது.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் 2 ஆவது வீட்டில் சுக்கிரன் இருப்பதால், உங்களின் நிதி நிலைமை பலப்படும். குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் தீரும். நிலம், சொத்து சம்பந்தமான விஷயங்களும் தீரும். குரலை உயர்த்தி பேசுவதைக் கட்டுப்படுத்தினால், உங்களின் பணியில் வெற்றி பெறுவீர்கள். பணத்தை யாருக்கும் கடனாகக் கொடுக்காதீர்கள், இல்லையெனில் கொடுத்த பணம் சரியான நேரத்தில் கிடைக்காது. திடீர் பண வரவிற்கான வாய்ப்பு உண்டு.
தனுசு
தனுசு ராசியின் முதல் வீட்டில் சுக்கிரன் இருப்பதால், உங்களின் தைரியமும், ஆற்றலும் அதிகரிக்கும். இக்காலம் மாணவர்களுக்கு சாதகமாக இருக்கும். புதிய வேலை அல்லது வெளிநாட்டு நிறுவனங்களில் வேலைக்கு முயற்சித்தால், வெற்றிக்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கும். மொத்தத்தில் இக்காலம் உங்களுக்கு சாதகமான காலமாக இருக்கும்.
மகரம்
மகர ராசியின் 12 ஆவது வீட்டில் சுக்கிரன் இருப்பதால், ஆடம்பரப் பொருட்கள் வாங்குவதற்கும், பயணத்துக்கும் அதிக செலவு செய்வீர்கள். நண்பர்கள் மற்றும் உறவினர்களிடமிருந்து விரும்பத்தகாத செய்திகளைப் பெறுவதற்கான வாய்ப்புகள் உண்டு. திருமண வாழ்வில் மனக்கசப்பு ஏற்படவிடாதீர்கள். சொத்து சம்பந்தமான பிரச்சனைகள் தீரும்.
கும்பம்
கும்ப ராசியின் 11 ஆவது வீட்டில் சுக்கிரன் இருப்பதால், வருமான ஆதாரங்கள் அதிகரிக்கும். காதல் தொடர்பான விஷயங்கள் தீவிரமடையும். சமூகத்தில் பணக்கார மக்களுடன் தொடர்பு அதிகரிக்கும். சமூக அந்தஸ்து அதிகரிக்கும்.
மீனம்
மீன ராசியின் 10 ஆவது வீட்டில் சுக்கிரன் இருப்பதால், தொழிலில் முன்னேற்றம் காண்பீர்கள். நீங்கள் ஏதேனும் பெரிய வேலையைத் தொடங்க விரும்பினால் அல்லது புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட விரும்பினால், இந்த கிரகப் பெயர்ச்சி சாதகமாக இருக்கும். யல் எஸ்டேட் தொடர்பான பிரச்னைகள் தீரும். நீங்கள் வெளிநாடு செல்ல விரும்பினால் அல்லது வெளிநாட்டு குடியுரிமைக்கு முயற்சி செய்தால், வாய்ப்பு சாதகமாக இருக்கும்.
Read more about: transit astrology zodiac signs pulse insync பெயர்ச்சி ஜோதிடம் ராசிகள் சுவாரஸ்யங்கள் உலக நடப்புகள்
Venus Direct In Sagittarius On 29 January 2022 Effects on Zodiac Signs in Tamil
Venus Direct january 2022 in Dhanu Rashi; Venus Direct In Sagittarius Effects on Zodiac Signs in Tamil: The Venus Direct In Sagittarius will take place on 29 January 2022. Learn about remedies to perform in tamil.
- Wi-Fi Security: Should You Use WPA2-AES, WPA2-TKIP, or Both?
- The Beast Rides Again in Sri Lanka
- District track results
- Crucial Star – AIA (Feat. JooYeong) Lyrics + Translation - iLyrics Buzz
- Do you want to establish a career in the atmospheric sciences? Interview with the Presidents of the AMS and the EGU-AS Division.
சுக்கிரனால் ஜனவரி 29 முதல் இந்த ராசிக்காரங்க பிரச்சனையெல்லாம் தீரப் போகுது.. உங்க ராசி இதுல இருக்கா? have 143 words, post on tamil.boldsky.com at January 28, 2022. This is cached page on Health Breaking News. If you want remove this page, please contact us.